சித்தோகர்: ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஒரு கோயிலில் ஒரு கிலோ தங்க பிஸ்கட், ரூ.23 கோடி ரொக்கம் ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் செலுத்தியுள்ள செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோகர் மாவட்டத்தில் சன்வாலியா சேத் என்ற புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் வைக்கப்பட்டுள்ள உண்டியல் நிரம்பிய நிலையில் அண்மையில் திறக்கப்பட்டது. அதில் இருந்த ரொக்கம், நகைகளை கணக்கிடும் பணி நடைபெற்றது. அப்போது 1 கிலோ எடையுள்ள தங்க பிஸ்கெட், ரூ.23 கோடி ரொக்கம், வெள்ளியால் செய்யப்பட்ட துப்பாக்கி, வெள்ளியால் செய்யப்பட்ட கைவிலங்கு ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கியது தெரியவந்தது.