இன்று காலை நிலவரப்படி கிரிப்டோ மார்க்கெட் சரிவுடனே தொடங்கியுள்ளது. முதன்மை காயினான பிட்காயின் உள்ளிட்ட பல்வேறு முன்னணி காயின்களும் 1.69% சரிவுடனே காணப்படுகின்றன.
அரசு பேருந்தில் அடிதடி; போதை பயணியால் பலியான நடத்துநர் – முதல்வர் இழப்பீடு!
கிரிப்டோ மார்க்கெட்டில் முன்னணி காயினான பிட்காயினின் விலையானது இன்று ஒரே நாளில் 2.84% சரிந்து 29,000 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது. அடுத்த முன்னணி காயினான எதிரியமும் 2.07% சரிந்து 2,000 டாலருக்கு வர்த்தமாகி வருகிறது.
முன்னணி ஆல்ட் காயின்களில் போல்க்கா டாட், சொலானா காயின்களைத் தவிர இதர காயின்கள் சரிவுடனே காணப்படுகின்றன. கிரிப்டோவில் முதன்மைக் காயினான பிட்காயின் 3.42 சதவீதமும், எதிரியம் 2.27 சதவீதமும், பைனான்ஸ் 4.68 சதவீதமாகவும் குறைந்துள்ளன.
ஆல்ட் காயின்களான கர்டானோ 1.40% சதவீதமும், ஷிபா இனு 2.89 சதவீதமும், அவலாஞ்சி 4.96 சதவீதம் சரிவுடன் காணப்படுகின்றன.
டோஜ்காயின் 2.83 சதவீதமும், எக்ஸ்.ஆர்.பிகாயின் 2.23 சதவீதமும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன. ஆனால் சொலானா 2.93 சதவீதமும், போல்க்கா டாட் காயின் 8.49 சதவீதம் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.
டாப் 10 காயின்களின் விலை நிலவரம் (காயின்மார்கெட் கேப் நிலவரப்படி):
பிட்காயின் – 29,352.09 டாலர் (3.18%)
எதிரியம் – 2,031.17 டாலர் (2.18%)
பைனான்ஸ் – 290.05 டாலர் (4.37%)
சொலானா – 52.31 டாலர் (3.65%)
கர்டானோ – 0.536 டாலர் (0.69%)
டோஜ் காயின் – 0.08919 டாலர் (2.25%)
ஷிபா இனு – 0.00001264 டாலர் (3.94%)
எக்ஸ்.ஆர்.பி – 0.4303 டாலர் (2.03%)
அவலாஞ்சி – 32.06 டாலர் (4.83%)
போல்க்கா டாட் – 10.39 டாலர் (8.43%)