மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி சலுகை மூலம் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை வருமான வரி இல்லை. இதுதவிர, நிலையான வருமான வரி விலக்கு ரூ.75 ஆயிரம் உள்ளது. எனவே, சம்பளம் பெறுவோர் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை.