புதுடெல்லி: அதானி நிறுவனம் மீதான லஞ்ச புகார் தனியார் நிறுவனத்துக்கும், அமெரிக்க சட்டத்துறைக்கும் தொடர்பானது. இதுபற்றி எங்களுக்கு முன்பே தெரியாது என ஒன்றிய அரசு கூறியுள்ளது. சூரிய எரிசக்தி மின்விநியோகம் தொடர்பான முதலீடுகளை பெற அதானி குழுமம் இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2,100 கோடி வரை லஞ்சம் வழங்கியதாக அமெரிக்க நீதிமன்றம் குற்றம்சாட்டி உள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தற்போது புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.
இதுகுறித்து ஒன்றிய வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, “இந்திய கோடீஸ்வர கவுதம் அதானி மீதான அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டு தனியார் நிறுவனங்கள், தனி நபர்கள் மற்றும் அமெரிக்க நீதித்துறை தொடர்பான சட்ட விஷயமாக ஒன்றிய அரசு கருதுகிறது.
இந்த விவகாரம் குறித்து இந்திய அரசுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி அமெரிக்க அரசுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இந்த வழக்கில் அமெரிக்க தரப்பில் இருந்து இந்தியாவுக்கு எந்தவொரு கோரிக்கையும் வரவில்லை. இதுபோன்ற வழக்குகளில் நிறுவப்பட்ட சட்ட வழிகள், நடைமுறைகள் உள்ளன. அவை பின்பற்றப்படும் என நம்புகிறோம்” என இவ்வாறு தெரிவித்தார்.
The post ரூ.2,100 கோடி லஞ்சம் வாங்கிய புகார் அதானி விவகாரம் தனியார் நிறுவனங்கள், அமெரிக்கா சட்டத்துறை தொடர்பானது: நழுவும் ஒன்றிய அரசு appeared first on Dinakaran.