மும்பை: ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கில், அதானி குழும தலைவர் கவுதம் அதானி, நிர்வாக இயக்குநர் ராஜேஷ் அதானி ஆகியோரை விடுவித்து, மும்பை ஐகோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. டிரையம்ப் செக்யூரிடி நிறுவனம் பங்குச்சந்தை மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக, தீவிரமான மோசடி வழக்குகளை விசாரிக்கும் புலனாய்வு அலுவலகம் (எஸ்எப்ஐஓ) கடந்த 2012ல் விசாரணை நடத்தியது. அப்போது, மும்பையில் பிரபல பங்குச்சந்தை புரோக்கராக இருந்த கேதன் பரேக், அதானி நிறுவன பங்குகளை வர்த்தகம் செய்து ரூ.151.4 கோடி லாபம் ஈட்டியது கண்டறியப்பட்டது.
இதன் மூலம் அதானி குழும நிர்வாகிகள் பங்குச்சந்தை விதிகளை மீறி சட்ட விரோதமாக ரூ.388.11 கோடி ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன்மூலம் பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ.540 கோடி இழப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் கவுதம் அதானி, ராகேஷ் அதானி உட்பட 12 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் மும்பை நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. அதில்,’ அதானி குழும தலைவர் கவுதம் அதானி, நிர்வாக இயக்குநர் ராஜேஷ் அதானி ஆகியோருக்கு இந்த மோசடியில் நேரடி தொடர்பு இல்லை. எனவே அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார்கள் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
The post ரூ.388 கோடி பங்குச்சந்தை மோசடி வழக்கு: கவுதம் அதானி, ராஜேஷ் அதானி விடுவிப்பு: மும்பை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.