சென்னை: ''800 மெகாவாட் மின் ஆலை 10 மாதங்களாகியும் இயங்காதது ஏன்? ரூ.41,000 கோடி கட்டண உயர்வுக்குப் பிறகும் மின்வாரிய நஷ்டம் ஏன்?'' என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் கடந்த இரு ஆண்டுகளில் சுமார் ரூ.41,000 கோடி அளவுக்கு உயர்த்தப்பட்ட பிறகும், மின்சார வாரியம் தொடர்ந்து இழப்பை எதிர்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலவும் ஊழல்களும், முறைகேடுகளும் தான் இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும் நிலையில், அவற்றைத் தடுப்பதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.