ஆரோக்கியம், கட்டுரை, மருத்துவம்

சர்க்கரை நோய் வராமலே இருக்க என்ன செய்யணும்? எப்படி தடுக்கலாம்?

நிறைய டயாபெட்டீஸ் நோயாளிகளுக்கு சர்க்கரை வியாதியை பற்றிய முழுவிவரமும் தெரிவதில்லை. மருந்துகள் இல்லாமல் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியுமா? கண்டிப்பாக முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

சில அறிகுறிகளை வைத்தே டயாபெட்டீஸ் வருவதை நீங்கள் முன்னரே அறிந்து கொள்ளலாம். அதை நீங்கள் கட்டுப்படுத்தவும் முடியும். அது குறித்து தான் இந்த சிறப்பு கட்டுரை.

டைப் 1 டயாபெட்டீஸ்

டைப் 1 டயாபெட்டீஸ் நோய் மொத்த மக்கள் தொகையில் 1% க்கும் குறைவான மக்களை பாதிக்கிறது. கிட்டத்தட்ட 5% மக்கள் சர்க்கரை நோயால் பாதிப்படைகின்றனர். நமது கணையம் சரியான அளவு இன்சுலினை சுரக்காத சமயத்தில் ஊசிகள் மருந்துகள் வழியாக இன்சுலின் சுரப்பு செய்யப்படுகிறது.

டைப் 2 டயாபெட்டீஸ்

டைப் 2 டயாபெட்டீஸ் வயதாகும் போது ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். 60% மக்களுக்கு டைப் 2 டயாபெட்டீஸ் வரக் காரணம் அதிக உடல் பருமனாகும். பைட் 2 டயாபெட்டீஸில் உடலில் உள்ள செல்கள் இன்சுலின் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. செல்கள் இந்த இன்சுலினை பயன்படுத்தி கார்போஹைட்ரேட் (சர்க்கரை சத்தை) ஆற்றலாக மாற்றுகிறது. இந்த வகை டயாபெட்டீஸில் இன்சுலின் சுரப்பு இருக்கும். ஆனால் போதுமான சர்க்கரையை ஆற்றலாக மாற்ற முடியாமல் இரத்தத்தில் கலக்கிறது.

ரிவர்ஸ் டைப் 2 டயாபெட்டீஸ்

மருத்துவர் ஒரு நாளைக்கு 600 கலோரிகள் வீதம் 8 வாரங்களுக்கு டயட் இருக்க சொல்கிறார். இப்பொழுது செல்கள் இன்சுலினை எதிர்க்கும் திறன் போய்விடும். கணையத்திற்கு மீண்டும் இன்சுலினை சுரக்கும் திறன் ஏற்படும். எனவே இதனால் மருந்து, ஊசிகள் போன்றவை தேவையில்லை. 12 வாரங்களுக்கு பிறகு பார்த்தால் உங்களின் குளுக்கோஸ் அளவு நார்மலாகி இருக்கும். எனவே போதுமான உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் உங்கள் உடல் எடையை குறைத்து டயாபெட்டீஸ் வருவதை தடுக்கிறது.

டயாபெட்டீஸ்யை தடுப்பது எப்படி?

நீங்கள் டயாபெட்டீஸ் வரப் போவதை முன்னரே தடுக்கலாம். 7% அளவு உடல் எடையை குறைக்க முயல வேண்டும். தினசரி 30 நிமிடங்கள் நடைபயிற்சி, உடற்பயிற்சி என வாரத்திற்கு 5 தடவை செய்து வாருங்கள். இந்த மாதிரி செய்து வந்தால் டைப் 2 டயாபெட்டீஸ் வருவதை 58% சரி செய்யலாம். உங்களுக்கு டயாபெட்டீஸ் வருவதாக இருந்தால் முன்னரே சில அறிகுறிகள் தென்படும். இதை இரத்த பரிசோதனை மூலம் கண்டறியலாம். குளுக்கோஸ் அளவு 100-125 அதாவது 5.7%-6.4 % என்ற அளவில் இருந்தால் அதற்கு ப்ரீ டயாபெட்டீஸ் என்று பெயர். இதற்கு குறைவாக இருந்தால் நார்மல், அதிகமாக இருந்தால் டயாபெட்டீஸ் இருக்கு என்று அர்த்தம். எனவே 5 வருடத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

அறிகுறிகள் சோர்வு அடிக்கடி தாகம் எடுத்தல் அடிக்கடி சிறுநீர் கழித்தல் எனவே போதுமான உடற்பயிற்சி, உடல் எடை, உணவுப் பழக்கம் போன்றவை உங்களை டயாபெட்டீஸ் நோயி லிருந்து காக்கிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *