புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 5ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதில், கல்காஜி தொகுதியில் முதல்வர் அடிசி மீண்டும் களம் இறங்கி உள்ளார். இந்தநிலையில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் அடிசி நேற்று காலை வேட்பு மனுவை தாக்கல் செய்ய கிளம்பினார். சிசோடியாவுடன் சென்ற அடிசி, கிரி நகரில் உள்ள குருத்வாராவில் வழிபட்டார். அப்போது அங்கிருந்த பக்தர்களிடம் ஆதரவு திரட்டினார்.
பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கல்காஜி தொகுதிக்குட்பட்ட பகுதியில் அவர் ரோட் ஷோ நடத்தினார். சிசோடியாவுடன் திறந்த காரில் சென்ற அடிசி வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தார். அதில் கூடுதல் நேரம் ஆனதால் வேட்பு மனு தாக்கல் செய்ய தாமதம் ஏற்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் செல்ல முடியாததால் அவரால் நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்ய முடியவில்லை. அதற்கு பதில், இன்று வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
The post ரோட் ஷோவால் தாமதம் மனுத்தாக்கல் செய்யாமல் திரும்பிய டெல்லி முதல்வர்: டெல்லி தேர்தலில் பரபரப்பு appeared first on Dinakaran.