கொல்கத்தா: பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசும் மக்கள் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாக கூறி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நேற்று கொல்கத்தாவில் போராட்டம் நடைபெற்றது.
திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொது செயலர் அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தையொட்டி 1,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகளில் வாகனப் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டது.