திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி சிபாரிசு கடிதங்களுக்கு வரும் மே 1ம்தேதி முதல் ஜூலை 15ம்தேதி வரை அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறையின்போது ஏற்படும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, வரும் மே 1ம்தேதி முதல் ஜூலை 15ம்தேதி வரை விஐபி தரிசனத்திற்கான புரோட்டோகால் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, முக்கிய பிரமுகர்கள் மட்டுமே விஐபி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சிபாரிசு கடிதங்களுக்கு விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 1ம்தேதி முதல் சிபாரிசு கடிதம் அல்லாமல் நேரடியாக வரும் விஐபிக்களுக்கு காலை 6 மணி முதல் சோதனை அடிப்படையில் விஐபி தரிசனம் நேரம் மாற்றி அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post வரும் 1ம்தேதி முதல் ஜூலை 15ம்தேதி வரை திருப்பதி கோயிலில் விஐபி சிபாரிசு கடிதங்களுக்கு அனுமதி இல்லை: தேவஸ்தானம் அறிவிப்பு appeared first on Dinakaran.