புதுடெல்லி: சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் சென்றதாக கூறப்படும் விமானம் டாமஸ்கஸ் விட்டுச் செல்லும் போது விபத்துக்குள்ளாகி இருக்கலாம் அல்லது சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று பரவி வரும் செய்திகளுக்கு மத்தியில், அதிபர் காணாமல் போயிருப்பது குறித்து பல ஊகங்கள் பரவி வருகின்றன.
டாமஸ்கஸில் இருந்து கடைசியாக புறப்பட்ட சிரிய விமான எண் 9218-ல் தான் சிரிய அதிபர் ஆசாத் சென்றதாக நம்பப்படுகிறது என ஒரு ஓபன் ஃபைளட் டிராக்கர்கள் தெரிவித்த நிலையில் ஆசாத் குறித்த ஊகங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவ ஆரம்பித்தன. சிரிய தலைநகரின் விமானநிலையத்தை கிளர்ச்சி படைகள் கைப்பற்றுவதற்கு முன்பாக அந்த விமானம் தான் புறப்பட்டுச் சென்றுள்ளது.