புதுடெல்லி: ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா தொழில்நுட்ப கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு நேபாளத்தை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அந்த வகையில் இங்கு மூன்றாமாண்டு பி.டெக் படித்து வந்த நேபாளத்தை சேர்ந்த 20 வயது மாணவி கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுதி அறையில் இறந்து கிடந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு அங்கு படிக்கும் நேபாள மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் “இந்தியாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்புக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளிக்கிறது” என வௌியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்த விவகாரத்தில் ஒடிசா அரசு ஏற்கனவே பலரை கைது செய்துள்ளது. இந்தியாவில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்பு, நல்வாழ்வுக்கு ஒன்றிய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது” என கூறினார்.
The post வெளிநாட்டு மாணவர்களின் பாதுகாப்புக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது: ஒன்றிய அரசு தகவல் appeared first on Dinakaran.