By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tamil Paper NewsTamil Paper NewsTamil Paper News
Notification Show More
Font ResizerAa
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Reading: ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?
Share
Font ResizerAa
Tamil Paper NewsTamil Paper News
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Search
  • தொலைக்காட்சி
  • பாலிமர் நியூஸ் டிவி
  • நியூஸ் 7 டிவி
  • மக்கள் டிவி
  • தலைப்பு செய்திகள்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • வணிகம்
  • கல்வி
  • யூடியூப் சேனல்கள்
  • Puthiya Boomi Tamil
  • செய்தி பிரிவுகள்
  • செய்தித்தாள்கள்
  • நியூஸ் பேப்பர்
  • புதிய தலைமுறை – செய்திகள்
  • NEWS TV
Follow US
  • Advertise
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Home » Blog » ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?
கட்டுரைமருத்துவம்

ஆன்ட்டிபயாட்டிக் அவசியமா?

EDITOR
Last updated: January 1, 2025 8:27 pm
By EDITOR
4 Min Read
Share
SHARE

Danger of antibioticsஒரு வேடிக்கையான கதை மருத்துவ வட்டாரங்களில் உலவி வருகிறது. கி.மு. 2000-ம் ஆண்டில் ஒருவனுக்கு ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் இந்தப் பச்சிலையை அல்லது இந்த வேரைச் சாப்பிடு என்றார்கள் மருத்துவர்கள். பின்னர்க் கி.மு.1000-ம் ஆண்டில் ஜலதோஷம், சளி, காய்ச்சல் என்றால் வேரையோ, பச்சிலையையோ சாப்பிடாதே, அது கடவுளால் ஆசீர்வதிக்கப்படவில்லை. பூஜை செய், ஜெபம் பண்ணு, தொழுகை நடத்து என்று மாந்திரீக நடவடிக்கைகளைச் செய்யச் சொன்னார்கள்.

கி.பி. 1850-களில் அதெல்லாம் மாந்திரீகம், மூடப்பழக்கம் இதோ இந்தக் கஷாயத்தைக் குடி என்றார்கள். கி.பி.1950-களில் கஷாயம் எல்லாம் விஷம், இதோ சோதனைச்சாலைகளில் நிரூபிக்கப்பட்ட மாத்திரை, இதைச் சாப்பிடு என்றார்கள். கி.பி. 1980-களில் மாத்திரைகள் போதாது. இதோ நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotics) சாப்பிடுங்கள் என்றார்கள். இப்போது கி.பி. 2000-ம் ஆண்டில் மறுபடியும் பச்சிலையையோ, வேரையோ சாப்பிடச் சொல்கிறார்கள்!?. இந்தக் கதையிலுள்ள முக்கியமான விஷயம் மாற்றம் அல்ல. இயற்கைக்குத் திரும்புதலே மனிதக் குலத்துக்குக் கடைசி வழி என்பதுதான்.

அற்புத உயிராற்றல்

ஒரு மருத்துவரிடம் சென்று எனக்குக் காய்ச்சல், சளி, இருமல், தும்மல், என்று சொன்னதும் அவர் ஒரு அனால்ஜெசிக், ஒன்றோ, இரண்டோ நுண்ணுயிர்க்கொல்லிகளையும் தன்னுடைய மருந்துச்சீட்டில் எழுதித் தருகிறார். அதை வாங்கிச் சாப்பிடுகிறோம். எல்லாம் சரியாகிவிடுகிறது. உண்மையில் எல்லாம் சரியாகி விட்டதா? முதலில் நமது உடல் தனக்குள் ஏற்படுகிற பாதிப்புகளை நம்முடைய பாதுகாப்பு அமைப்புக்கும், நமக்கும் தெரியப்படுத்துகிற அறிகுறிகளே காய்ச்சல், சளி, தும்மல், இருமல் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்னொரு வகையில் உடலின் உயிராற்றலைப் பாதிக்கும் நுண்ணுயிரிகள் (வைரஸ்கள், பாக்டீரியாக்கள்) உடலுக்குள் நுழைந்திருப்பதைச் சொல்லும் எச்சரிக்கைதான், இந்த வெளிப்படையான பாதிப்புகள். இந்த எச்சரிக்கை நம்முடைய பாதுகாப்பு படையணிகள் யுத்தத்துக்குத் தயாராகச் சொல்வதற்கும் யுத்தம் நடத்துவதற்குமான முழக்கம்.

நம்முடைய உடலின் பாதுகாப்பு அமைப்பின் இன்னொரு விசேஷமான காரியம். ஒரு முறை உடலில் நுழைந்து உயிராற்றலுக்கும் உடலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளின் பயோடேட்டாவை, தன்னுடைய ஞாபகத்தொகுப்புகளில் பத்திரப்படுத்திக் கொள்ளும். அது மட்டுமல்ல எதிரி நுண்ணுயிரியின் யுத்த முறைகளையும், யுத்தத் தந்திரங்களையும் அதற்கு எதிராக எடுத்த எதிர் நடவடிக்கைகளையும்கூடத் தன்னுடைய நினைவு அடுக்குகளில் பதிவு செய்துகொள்ளும்.

பலமும் பலவீனமும்

ஒரு முறை கொன்றொழித்த நுண்ணுயிரிகள் மீண்டும் உடலுக்குள் நுழைந்தால்போதும், உடனே ஒரு பொத்தானைத் தட்டி தன்னுடைய ஞாபகத் தொகுப்பிலிருந்து அந்த நுண்ணுயிரியை எதிர்கொள்வதற்கான எல்லா நடவடிக்கைகளையும் கணப்பொழுதில் எடுத்துவிடும். ஆனால், உடலினுள்ளே நுழைந்திருக்கும் நுண்ணுயிரியின் தன்மைகளைப் பற்றி நமது பாதுகாப்பு அமைப்பு அறியத் தொடங்குவதற்கு முன்னதாகவே நாம் சாப்பிடும் நுண்ணுயிர்க்கொல்லிகள் அவற்றை அழித்துவிடுகின்றன.

அதனால் நம்முடைய பாதுகாப்பு அமைப்பில் அந்த நுண்ணுயிரிகளைப் பற்றிய எந்தப் பதிவுகளும் இல்லாமல் போய்விடுகிறது. அதற்குப் பிறகு எப்போது அந்த நுண்ணுயிரிகள் தாக்குதல் தொடுக்கும்போதும், வெளியிலிருந்து நுண்ணுயிர்க்கொல்லியின் ஆதரவு தேவைப்படும் அளவுக்கு உடல் பலவீனமாகி விடும். தூண்டத் தூண்ட துலங்கும் விளக்கு போலத்தான் நம்முடைய பாதுகாப்பு அமைப்பும் நுண்ணுயிரிகளின் தாக்குதல்களைத் தானே சமாளிக்கும்போது மேலும் மேலும் பலம் பெறும்.

பாக்டீரிசியான்

நமது உடல் ஆரோக்கியமாக, முழு பலத்துடன், உற்சாகமாக இயங்குவதற்கு நமது உடலுக்குள்ளேயே சுமார் ஒன்றரைக் கிலோ அளவுக்கு நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் இருக்கின்றன. இவை நமது உடலின் நண்பர்கள். இந்த நண்பர்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றால், நமது உடல் மெல்ல மெல்ல நலிவடையும். இவர்களுடைய இருத்தல் மிக மிக அவசியம்.

நாம் தனியாகச் சாப்பிடும் நுண்ணுயிர்க்கொல்லிக்கு என்ன தெரியும்? அதன் வேலை நுண்ணுயிரிகளை அழிப்பது. அந்த நுண்ணுயிரிகள் நல்லவையா? கெட்டவையா? என்பதைப் பற்றி அதற்குக் கவலையில்லை. அழிக்கப்போகிற நுண்ணுயிரிகளின் வேலைகளைப் பற்றியும் அதற்குத் தெரியாது. ஆக, அது உடலுக்குள் புகுந்து நுண்ணுயிரிகள் அனைத்தையும், நல்லது கெட்டது அனைத்தையும் அழிக்கிறது.

நமது உடலில் நுழையும் தீய பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சை தொற்று போன்றவற்றை எதிர்க்கும் முதல் படையணி உடலில் உள்ள நன்மை நுண்ணுயிரிகள்தான். அது மட்டுமல்லாமல் அவை உடலுக்குத் தேவையான வைட்டமின் பியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், தொற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படுகின்றன. அதோடு அவை பாக்டீரிசியான் (bactericions) என்ற பொருளையும் உற்பத்தி செய்கின்றன. இந்தப் பாக்டீரிசியான்கள் இயற்கையான நுண்ணுயிர்க்கொல்லியாகச் செயல்படுகின்றன.

என்ன பாதிப்பு?

இத்தகைய நன்மை நுண்ணுயிரிகளையும் சேர்த்து நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் கொன்றுவிடுகின்றன. ஒரு முறை நீங்கள் எடுக்கும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளால் அழிந்துவிடும் நன்மை நுண்ணுயிரிகள் திரும்பவும் உருவாக, குறைந்தது ஆறு மாதங்களாகும்.

அது மட்டுமல்ல தொடர்ந்து வெளியிலிருந்து சாப்பிடும் நுண்ணுயிர்க்கொல்லிகளால் தீமை பாக்டீரியாக்களுக்கும், வைரஸ்களுக்கும் தற்காப்புத் திறன் கூடிக்கொண்டே போகிறது. அதனால், வெளியிலிருந்து எடுக்கும் நுண்ணுயிர்க்கொல்லிகளின் அளவும் கூடிக்கொண்டே போகிறது. தேவைக்கு அதிகமான நுண்ணுயிர்க்கொல்லிகளை வெளியேற்றும் பணியைச் செய்யும் சிறுநீரகங்களும் சிரமப்படும். அளவுக்கு அதிகமான வேலைப்பளுவால் சில நேரம் சிறுநீரகங்கள் வேலைநிறுத்தம் செய்யவும் கூடும். உடல் பலவீனமடையும்.

எனவே, அநாவசியமாக நுண்ணுயிர்க்கொல்லிகளைச் சாப்பிடக் கூடாது. ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க உதவி செய்வதே மருத்துவர்களின் தலையாய கடமை. எனவே, அவர்களும் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

சரி, இயற்கையான எதிர்ப்புச்சக்தியை எப்படி அதிகரிப்பது? எதற்கெடுத்தாலும் மருந்துகளை உட்கொள்ளும் பழக்கத்தை முதலில் நிறுத்த வேண்டும். உடல் தன்னுடைய பாதுகாப்பு படையைப் பயன்படுத்த அவகாசம் தரவேண்டும். தீமை நுண்ணுயிரிகளும் நன்மை நுண்ணுயிரிகளும் நம் உடலில் அதிகமாகவோ குறைவாகவோ இருப்பதற்கு நம்முடைய வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கமே முக்கியமான காரணம்.

எனவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான உணவு, சரிவிகித உணவு அவசியம். இந்த உணவே நம்முடைய எதிர்ப்புச்சக்தியைத் தூண்டிப் பாதுகாப்புப் படைக்குப் பலத்தைத் தரும். அந்தப் பலத்தால் எந்தத் தீய நுண்ணுயிரிகளையும் நமது உயிராற்றல் அழித்து, ஆரோக்கியத்தை நிலைநாட்டும்.

கட்டுரையாளர், எழுத்தாளர்

உதயசங்கர்

-தி இந்து

You Might Also Like

குமரி பாலம்: கண்ணாடி இருக்குமிடத்தில் சுத்தியலுக்கு என்ன வேலை?

மழைநீர் கால்வாய் பணிகளை விரைந்து முடிப்பது அவசியம்!

தாஜ்மஹாலில் பூட்டப்பட்ட 22 அறைகள்… ரகசியத்தின் பின்னணி இதுதான்

டெட் தேர்வு: மாணவர் நலனே முன்னிறுத்தப்பட வேண்டும்

வாருங்கள், தோட்டம் போடுவோம்

Share This Article
Facebook Email Print
Previous Article வேண்டாம் ரசாயன உரங்கள்
Next Article இந்தியாவை இந்தியாவாக இருக்க விடுங்கள்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

சுற்றி வளைக்கப்படும் எடப்பாடி பழனிசாமி – என்ன செய்யப் போகிறது அதிமுக?
தமிழ்நாடு
வெறுப்பு பேச்சு விவகாரம்: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு
தமிழ்நாடு
12,000+ தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தி சென்னை மாநகராட்சி நடவடிக்கை
தமிழ்நாடு
டெல்லியில் அமித் ஷா உடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!
தமிழ்நாடு
© 2025 TAMILPAPERNEWS.COM. All Rights Reserved.

Powered by
...
►
Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
None
►
Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
None
►
Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
None
►
Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
None
►
Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
None
Powered by
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?