சென்னை: “வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் காரணமாக கடந்த இரண்டு மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்.” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்றிரவு கரையைக் கடக்கவுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனழை பெய்து வருகிறது. சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக மழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.