டெல்லி – குர்கான் தேசிய நெடுஞ்சாலையில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து பிரச்சனைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது.
குர்கான் பகுதியில் 100 மி.மீட்டர் அளவில் 20 நிமிடம் பெய்த மழையை தாங்க முடியாமல் நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், 25க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையின் நடுவிலேயே பழுதாகி நின்றதால் 20 கி.மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் தேங்கி ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அரை மணி நேரத்தில் கடக்க வேண்டிய தூரத்தை வாகன ஓட்டிகள் 7 மணி நேரத்தில் கடந்து சென்ற பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.