பாகிஸ்தானில் போலீஸார் ரெய்டு நடத்திய மோசடி கால் சென்ட்டரில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப் மற்றும் பர்னிச்சர்களை பொது மக்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமபாத்தில் சீனாவைச் சேர்ந்த சிலர் கால் சென்ட்டர் நடத்தினர். இதில் வெளிநாடு மற்றும் உள்நாட்டைச் சேர்ந்த நபர்கள் பணியாற்றினர். இந்த கால் சென்ட்டர், உலக முழுவதும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. இது குறித்து பாகிஸ்தான் அரசுக்கு புகார் அளிக்கப்பட்டதும், அந்த கால் சென்ட்ரில் போலீஸார் சோதனை நடத்தினர். மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, அங்கு பணியாற்றிய 24 ஊழியர்களை கைது செய்தனர். சிலர் தப்பிச் சென்றனர்.