லக்னோ: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு பிப்ரவரி 11ம் தேதிக்கு ஒத்திவைத்து சுல்தான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக தேர்தல் பிரசாரத்தின்போது அவதூறான கருத்துகளை பேசியதாக குற்றம்சாட்டி, உத்தரப் பிரதேசத்தின் ஹனுமன்கஞ்ச் பகுதியை சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி விஜய் மிஸ்ரா என்பவர் கடந்த 2018ம் ஆண்டு சுல்தான்பூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது ராகுல் காந்தி கோர்ட்டில் ஆஜராக தவறியதை தொடர்ந்து, கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ராகுல் காந்தி கோர்ட்டில் சரணடைந்தார். தொடர்ந்து கடந்த ஜூலை 26ம் தேதி ராகுல் காந்தி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்ததபோது ராகுல் காந்தியின் வழக்கறிஞர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ளவில்லை. இதற்கான மருத்துவச் சான்றிதழைச் சமர்ப்பித்துள்ளார். இந்நிலையில், சுல்தான்பூர் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி சுபம் வர்மா அடுத்த விசாரணையை பிப்ரவரி 11ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
The post மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு பிப்.11ம் தேதிக்கு ஒத்திவைத்தது சுல்தான்பூர் கோர்ட்!! appeared first on Dinakaran.