கொல்கத்தா: வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தின் பல இடங்களில் கடந்த வாரம் போராட்டங்கள் நடைபெற்றன. முர்ஷிதாபாத்தில் நடந்த போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டு 3 பேர் கொல்லப்பட்டனர். வாகனங்கள்,வீடுகளை வன்முறையாளர்கள் தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக 150 பேர் கைது செய்யப்பட்டனர். வன்முறைக்கு பயந்து ஏராளமானவர்கள் பக்கத்து மாவட்டமான மால்டாவுக்கு தப்பி சென்றனர்.
கலவரம் பாதித்த முர்ஷிதாபாத்துக்கு சென்று பார்வையிட உள்ளதாக மாநில ஆளுநர் ஆனந்த போஸ் தெரிவித்திருந்தார். ஆனால் கலவரம் நடந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என ஆளுநருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில்,ஆளுநர் ஆனந்த போஸ் மால்டாவுக்கு நேற்று சுற்றுபயணம் மேற்கொண்டார். ஆளுநர் மாளிகையில் இருந்து புறப்படும் முன் கூறுகையில்,‘‘ நான் சம்பவ பகுதிகளை பார்வையிட செல்கிறேன்’’ என்றார். இதற்கிடையே, மால்டாவில் தஞ்சமடைந்துள்ளவர்களை தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் நேற்று சந்தித்தனர்.
The post முதல்வர் மம்தா விடுத்த வேண்டுகோளை ஏற்காமல் வன்முறை பாதித்த பகுதிக்கு மேற்கு வங்க ஆளுநர் பயணம் appeared first on Dinakaran.