பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அகழி கிராமப் பஞ்சாயத்துக்குட்பட்ட பாறக்குளம் ஓசித்தியூர் ஆதிவாசி காலனியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (58). இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர். இவருக்கு மல்லிகா (50) என்ற மனைவியும், ராஜேஷ் (32), ரஞ்ஜித் (30) என்ற மகன்களும் இந்து என்ற ஒரு மகளும் உள்ளார்.
இந்நிலையில் ஈஸ்வரன் மது குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் மகன்களுடன் தகராறு செய்து வந்தார். இதனால் மனைவி மல்லிகா தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இரண்டு மகன்களும் ஆத்திரத்தில் தந்தை ஈஸ்வரனிடம் வாக்குவாதம் செய்தனர்.
அப்போது இருவரும் மரக்கட்டையால் தந்தையை தலையில் அடித்து தாக்கினர். இதில் ஈஸ்வரன் உயிரிழந்தார். இந்நிலையில், மகன்கள் இருவரும் தந்தையின் பிணத்தை வீட்டிற்குள் வைத்து வீட்டை அடைத்து தப்பியுள்ளனர்.
இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் அகழி போலீசாருக்கு தகவலளித்தனர். இதன்பேரில் டி.எஸ்.பி அசோக் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து தலைமறைவான ராஜேஷ், ரஞ்ஜித் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் குறித்து அகழி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post அட்டப்பாடி அருகே தந்தையை கட்டையால் அடித்து கொன்ற மகன்கள் கைது appeared first on Dinakaran.