அரசின் வாக்குறுதி மற்றும் மழை வெள்ள பாதிப்பு ஆகியவற்றால் வருவாய்த்துறை அலுவலர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் எம்.பி.முருகையன், பொதுச்செயலாளர் சு.சங்கரலிங்கம் ஆகியோர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 3 நாட்களாக பணி புறக்கணிப்பு மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. கடலோர மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு 10 மாவட்டங்களுக்கு இ்ப்போராட்டத்தில் இருந்து விலக்களிக்கப்பட்டது. மற்ற மாவட்டங்களி்ல் போராட்டம் நடபெற்றது. தற்போது மேலும் சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், சங்க நிர்வாகிகளை அரசு தரப்பில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.