திருமலை: மகாராஷ்டிர மாநிலம், மும்பை துறைமுக மண்டலத்தை சேர்ந்தவர் துணை ஆணையர் சுதாகர்பதரே. ஐபிஎஸ் அதிகாரி. இவருக்கு, டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட இருந்தது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியில் தற்போது பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில் சுதாகர்பதரே, உறவினர் பகவத்கிஷன்ராவ் பாட்டீலுடன் நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சைலம் மல்லிகார்ஜுன சுவாமியை தரிசிக்க காரில் சென்றார். இவர்கள் கார் கர்னூல் மாவட்டம் டோமலபெண்டாவில் உள்ள ஆக்டோபஸ் வியூ பாயிண்ட் அருகே சென்றபோது, ஸ்ரீசைலத்திலிருந்து வந்த அரசு பஸ்சும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. சுதாகர்பதரே மற்றும் உறவினர் பகவத்கிஷன்ராவ் பாட்டீல் ஆகியோர் படுகாயமடைந்தனர். மருத்துவமனை செல்லும் வழியில் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.
The post அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்; ஐபிஎஸ் அதிகாரி உட்பட 2 பேர் பலி appeared first on Dinakaran.