புதுடெல்லி: தமிழ்நாடு அரசுக்கும் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தில் தொடங்கி அனைத்து விஷயங்களிலும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதுபோன்ற சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ரிட் மனுக்கள் முன்னதாக தாக்கல் செய்யப்பட்டது. அதேபோன்று கடந்த வாரம் ஒரு புதிய ரிட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தையும் கடந்த 17ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைக்கிறோம். அதற்குள் ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் தரப்பில் இந்த விவகாரத்தில் ஒரு தீர்வை காண வேண்டும்.
இல்லையெனில் வழக்கை நாங்களே விசாரித்து இறுதியாக தீர்த்து வைப்போம்” என தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று இறுதி உத்தரவை பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ஆளுநர் ஆர்.என்.ரவி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு appeared first on Dinakaran.