டெல்லி : இஸ்ரோ விஞ்ஞானிகள், விண்வெளி சகோதரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். PSLV C60 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்ட SpaDeX திட்டத்தின் 2 செயற்கைக்கோள்களும் டாக்கிங் முறையில் வெற்றிகரமாக இணைக்கப்பட்டதாக இஸ்ரோ இன்று காலை அறிவிப்பு வெளியிட்டது. 1.5 கி.மீ. இடைவெளியில் இருந்த செயற்கைக்கோள்கள் 50 மீட்டராகவும், பிறகு 15 மீட்டராகவும், இறுதியில் 3 மீட்டராகவும் குறைத்து இணைக்கப்பட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான், சந்திரயான் 4 திட்டங்களுக்கு டாக்கிங் முக்கியமானது.
அமெரிக்க, ரஷ்யா, சீனாவை தொடர்ந்து ஸ்பேஸ் டோக்கிங் முறையை வெற்றிகரமாக செயல்படுத்திக்காட்டிய 4வது நாடு என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. SpaDeX திட்டத்தின் வெற்றி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்றுள்ள நாராயணன் அவர்களின் முதல் வெற்றியாக பதிவாகி உள்ளது. இந்த நிலையில், இஸ்ரோவின் சாதனைக்கு விஞ்ஞானிகள், விண்வெளி சகோதரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், “செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைப்பதை வெற்றிகரமாக நிரூபித்ததற்காக இஸ்ரோவில் உள்ள நமது விஞ்ஞானிகளுக்கும், ஒட்டுமொத்த விண்வெளி சகோதரத்துவத்திற்கும் வாழ்த்துக்கள். இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சான்று,”எனத் தெரிவித்துள்ளார்.
அதே போல் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள பதிவில், “ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றியடைந்தது வரலாற்று மைல்கல். விண்வெளி டாக்கிங் திறனை வெளிப்படுத்தும் 4வது நாடு இந்தியா. விண்வெளி ஆராய்ச்சிகள் இந்தியாவில் எதிர்கால முயற்சிகளுக்கு வழி வகுக்கும்,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.
The post இந்தியாவின் லட்சிய விண்வெளிப் பயணங்களுக்கு இது குறிப்பிடத்தக்க சான்று: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி வாழ்த்து!! appeared first on Dinakaran.