நியூயார்க்
வழக்கமான உடற்பயிற்சியும், ‘செக்ஸ் உறவும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என்று நியூயார்க் நகரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் அந்தோணி கரேலிஸ் கண்டுபிடித்துள்ளார். உடல் நலம் சீராக, நம் உடலில் உள்ள தேவையற்ற கலோரிகள் எரிக்கப்பட வேண்டும். செக்ஸ் உறவின்போது, கலோரி நன்கு எரிக்கப்படுவதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. அதாவது, ‘செக்ஸ் உறவுக்கு முந்தைய விளையாட்டுகளையும் சேர்த்து, ‘செக்ஸ்Õ உறவுக்கு 25 நிமிடங்கள் செலவிடுவதாக வைத்துக்கொள்வோம். அதில், ஆண்களுக்கு 100 கலோரிகளும், பெண்களுக்கு 75 கலோரிகளும் எரிக்கப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. அதாவது, ஆணுக்கு ஒரு நிமிடத்துக்கு 4 கலோரிகளும், பெண்ணுக்கு ஒரு நிமிடத்துக்கு 3 கலோரிகளும் எரிக்கப்படுகிறதாம். மேலும், ‘செக்ஸ்Õ உறவு, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதுடன், இதய ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கிறது, மன அழுத்தத்தை தவிர்க்கிறது.
அதே சமயத்தில், செக்ஸ் உறவு மட்டுமே போதும் என்று உடற்பயிற்சியை கைவிடக்கூடாதாம். அதையும் சேர்த்துச் செய்தால்தான், உடல் நலம் மேம்படும் என்கிறார்கள்.