டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் காலை 9 மணியளவில் கங்கோத்ரி நோக்கி தனியார் ஹெலிகாப்டர் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 5 பேர் சம்பவ இடந்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்,. மேலும் இருவர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதனையடுத்து ராணுவ வீரர்கள், பேரிடர் மேலாண்மை குழு, ஆம்புலன்ஸ், வருவாய் குழுவினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தி உள்ளது. இதையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post உத்தராகண்டில் ஹெலிகாப்டர் விபத்து: சுற்றுலா பயணிகள் 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.