
புதுடெல்லி: உலகின் மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது.
சுவிஸ் காற்று தர தொழில்நுட்ப நிறுவனமான ஐகியூஏர்-ன் (IQAir) உலக காற்று தர அறிக்கை 2025 தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் நம் நாட்டின் தலைநகரமான டெல்லி முதலிடத்தைப் பிடித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்று தரக்குறியீடு (ஏகியூஐ) 350 ஆக உள்ளது.

