பாலக்காடு : சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் நகராட்சி பகுதியில் கண்டன பேரணி நேற்று நடைபெற்றது. இந்த பேரணியை கேரள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் வி.டி.பல்ராம் தொடங்கி வைத்தார்.
மோடி அரசு சமையல் எரிவாயுவுக்கு அடிக்கடி விலை உயர்த்துவதை கண்டித்து பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் மகளிர் அணியினர் நகர வீதியில் பேரணி நடத்தினர். மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் சிந்து ராதாகிருஷ்ணன் தலைமையில் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் மகளிர் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சுபைதா முகமது, மாநில செயலாளர் சொப்னா ராமசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாலக்காடு மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய பேரணியில் மாவட்ட நிர்வாகிகள் பாஞ்சாலி, கீதா சிவதாஸ், இந்திராதேவி, ரஹ்மத், ப்ரீஜா சுரேஷ், சாரதா துளசீதரன், பார்வதி, லதா, அனிதா, இந்து நாராயணன் உட்பட ஏராளமான மகளிர் அணியினர் பங்கேற்றனர்.
The post காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு எதிர்த்து கண்டன பேரணி appeared first on Dinakaran.