திருவனந்தபுரம்: நடிகர் மோகன்லாலுடன் சபரிமலை சென்ற திருவல்லா போலீஸ் இன்ஸ்பெக்டர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். பிரபல நடிகர் மோகன்லால் கடந்த சில தினங்களுக்கு முன் இருமுடிக் கட்டுடன் சபரிமலை சென்று தரிசனம் செய்தார். அப்போது நடிகர் மம்மூட்டிக்காக சபரிமலையில் அவர் சிறப்பு பூஜையும் நடத்தினார். மோகன்லால் சபரிமலை செல்லும்போது அவருடன் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் கிருஷ்ணனும் உடன் சென்றார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இன்ஸ்பெக்டர் சுனில் கிருஷ்ணன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். நடிகர் மோகன்லாலுடன் இவர் சபரிமலை சென்றது தான் இந்த இடமாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இவரிடம் விளக்கம் கேட்டு பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி வினோத்குமார் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
The post சபரிமலைக்கு மோகன்லாலுடன் சென்ற இன்ஸ்பெக்டர் இடமாற்றம் appeared first on Dinakaran.