புதுடெல்லி: சிக்கிமில் பேருந்து விபத்தில் சிக்கிய 10 வீரர்களை ராணுவ ஹெலிகாப்டர்கள் அதிரடியாக மீட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் கேங்டாக் அருகே இருக்கும் ஜுலுக்கில் இந்திய ராணுவத்தின் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த சஷஸ்திரா சீமா பால் (எஸ்.எஸ்.பி) படைப் பிரிவு முகாம் உள்ளது. இந்த முகாமின் பணியாளர்கள் 10 பேர் சென்ற பேருந்து வனப்பகுதியில் விபத்தில் சிக்கியதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து இந்திய விமானப்படையின் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியிருந்த 10 சஷஸ்திரா சீமா பால் வீரர்களை மீட்டது.
இதுகுறித்து விமானப்படை வெளியிட்ட அறிக்கையில்,
‘விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் பாக்டோக்ரா விமானத் தளத்தில் இருந்து இரண்டு சீட்டா ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டது. அதே தளத்திலிருந்து ஒரு எம்ஐ-17வி5 ஹெலிகாப்டரும் ஏவப்பட்டது. சுமார் 9000 அடி உயரத்தில் இருக்கும் ஜுலுக் ஹெலிபேடில் இருந்து சென்ற ஹெலிகாப்டர்கள், விபத்தில் சிக்கிய 10 பேரையும் பத்திரமாக மீட்டது. காயமடைந்த வீரர்கள் மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.
The post சிக்கிமில் பேருந்து விபத்தில் சிக்கிய 10 வீரர்கள் பத்திரமாக மீட்பு: ராணுவ ஹெலிகாப்டர் அதிரடி appeared first on Dinakaran.