பெரம்பூர்: சென்னை சூளை பகுதியில் உள்ள பிளைவுட் கம்பெனியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் வேலை செய்கிறார். இவருக்கு அந்த மாநிலத்தில் சிறுவயதிலேயே திருமணம் செய்துவைத்துள்ளனர். இந்தநிலையில், கர்ப்பமாக இருந்த மனைவியை சில நாட்களுக்கு முன் சென்னைக்கு அழைத்துவந்து உள்ளார். இதையடுத்து அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த மாதம் 26ம் தேதி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அப்போது சிறுமியின் வயது குறித்த ஆவணங்களை ஊழியர்கள் சரிபார்த்தபோது சிறுமிக்கு 14 வயதுதான் ஆகிறது என்பது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கொடுக்கப்பட்ட தகவல்படி, சமூக நலத்துறை அதிகாரி வந்து விசாரித்துள்ளார். இதுகுறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
The post ஜார்க்கண்ட் மாநிலத்ைத சேர்ந்த 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கணவர் மீது போக்சோவில் வழக்கு appeared first on Dinakaran.