சென்னை: கடந்த திங்கள்கிழமை (நவ.18) தொடங்கி தங்கம் விலை தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் (நவ.23) அதிகரித்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.600 உயர்ந்துள்ளது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை இறங்குமுகமாக காணப்பட்டு வந்தது. பவுனுக்கு ரூ.3,000 வரை குறைந்த நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் இருந்தே மீண்டும் விலை உயர்ந்து வருகிறது.