மும்பை: நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய விஜய் தாஸ் என்பவரை செய்தது மும்பை போலீஸ் கைது செய்தது. சயிஃப் அலிகானை கத்தியால் குத்திய சம்பவத்தில் 35 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீஸ்தேடி வந்த நிலையில் விஜய் தாஸ் தானேவில் கைது செய்யப்பட்டார்.
மும்பையில் உள்ள வீட்டிற்கு திருட வந்த நபரை தடுக்க முயன்றபோது கத்தியால் குத்தியதில் நடிகர் சயிஃப் அலிகான் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஷர்மிளா தாகூர் மற்றும் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலி கான் பட்டோடியின் மகன் சைஃப் அலி கான். இவர்ர் 1993 இல் பரம்பரா திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீட்டுக்குள் புகுந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பணிப்பெண்ணிடம் வாக்குவாதம் செய்தார்.
இதனை தடுக்க முயன்ற சயிஃப் அலிகானை மர்ம நபர் கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த சைஃப் அலி கான் மும்பை கான் பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலைத் தொடர்ந்து, பாந்த்ரா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நடிகர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய விஜய் தாஸ் என்பவரை செய்தது மும்பை போலீஸ் கைது செய்தது. தானேவில் உள்ள மதுபான பாரில் விஜய் தாஸ் வேலை செய்து வந்ததாக போலீஸ் விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. சயிஃப் அலிகானை கத்தியால் குத்திய சம்பவத்தில் 35 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீஸ்தேடி வந்த நிலையில் விஜய் தாஸ் தானேவில் கைது செய்யப்பட்டார். சயிஃப் அலிகானை கத்தியால் குத்தியதை விஜய் தாஸ் ஒப்புக்கொண்டார்.
The post நடிகர் சயிஃப் அலிகானை கத்தியால் குத்திய விஜய்தாஸ் என்பவர் கைது! appeared first on Dinakaran.