புதுடெல்லி : பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை பற்றி அமெரிக்கா, இங்கிலாந்து,சவுதி அரேபியா,ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது பாகிஸ்தான் மற்றும் அந்த நாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத உள்கட்டமைப்புகள் மீது நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் குறித்து அவர் விளக்கினார்.
இது அளவிடப்பட்ட மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதை தீவிரப்படுத்தும் நோக்கம் இந்தியாவுக்கு இல்லை. ஆனால் பாகிஸ்தான் தீவிரப்படுத்த முடிவு செய்தால் கடுமையான பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது என்று கூறினார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ,இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோனாதன் பவுல், சவுதி அரேபியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் முசைத் அல் அய்பான் ஆகியோருடன் அவர் பேசினார்.
The post பதற்றங்களை அதிகரித்தால் பாகிஸ்தானுக்கு கடுமையான பதிலடி கொடுக்க இந்தியா தயார்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தோவல் எச்சரிக்கை appeared first on Dinakaran.