போபால்: மத்தியபிரதேச மாநிலம் போபாலில் காரில் இருந்து ரூ.40 கோடி மதிப்புள்ள 52 கிலோ தங்க கட்டிகள், ரூ.11 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம், தங்க கட்டிகள் மபி முன்னாள் போக்குவரத்துத்துறை கான்ஸ்டபிள் சவுரப் ஷர்மாவுக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.3 கோடி ரொக்கப்பணம் சிக்கியது. விருப்ப ஓய்வு பெற்ற கான்ஸ்டபிளிடம் இவ்வளவு பெரிய தொகை, தங்கம் சிக்கியது என்பது தொடர்பாக லோக்ஆயுக்தா போலீஸ், அமலாக்கத்துறை வழக்கு பதிந்து விசாரிக்கின்றன.
The post போபாலில் காட்டில் நிறுத்திய காரில் 52 கிலோ தங்கம், ரூ.14 கோடி பணம் சிக்கியதில் மாஜி அதிகாரி மீது வழக்கு: அமலாக்கத்துறை அதிரடி appeared first on Dinakaran.