புதுடெல்லி: மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு தொடர்பாக மேலும் ரூ.388 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. சட்டீஸ்கரை சேர்ந்த சவுரப் சந்திரகர், மற்றும் அவரது கூட்டாளி ரவி உப்பல் ஆகியோர் மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வருகின்றனர். இந்த செயலி மூலம் ரூ.5 ஆயிரம் கோடி வரை மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் 14 பேர் அடங்கிய 197 பக்க முதல் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது. மேலும் ஹவாலா சகோதரர்கள் அனில், சுனில் தம்மானி, சதீஷ் சந்திரகார் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் சந்திரபூஷன் வர்மா உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக 4 குற்றப்பத்திரிகைகளும் தாககல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த வழக்கில் ரூ.2,295.61 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு அல்லது பறிமுதல் செய்யப்பட்டு அல்லது இணைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில் மேலும் பல கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது, “மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி பண மோசடி வழக்கில் தொடர்புடைய மேலும் ரூ. 387.99 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ய கடந்த 5ம் தேதி தற்காலிக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி அசையா சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளது.
The post மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் ரூ.388 கோடி மதிப்பு சொத்துகள் பறிமுதல் appeared first on Dinakaran.