புதுடெல்லி: மாநில அரசு என்ற பெயரில் டெல்லி மக்கள் பேரழிவையே (AAP-DA) கண்டார்கள் என்று ஆம் ஆத்மி அரசு மீது தாக்குதல் தொடுத்துள்ள பிரதமர் மோடி, வரும் டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பரிவர்தன் பேரணியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது: "வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தலைநகராக டெல்லியை நாம் மாற்றவேண்டும். டெல்லியின் வளமான எதிர்காலத்துக்காக பாரதிய ஜனதா கட்சிக்கு இந்தத் தேர்தலில் டெல்லி மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் இருந்த அரசு பேரழிவுக்கு (AAP-DA) சற்றும் குறைவில்லாதது. டெல்லி வளர்ச்சியை விரும்புகிறது.