புதுடெல்லி: யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் கீதையும் நாட்டிய சாஸ்திரமும் சேர்க்கப்பட்டிருப்பது நமது காலத்தால் அழியாத ஞானத்துக்கும் வளமான கலாச்சாரத்திற்கும் கிடைத்த உலகளாவிய அங்கீகாரம் என பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஸ்ரீமத் பகவத் கீதை, பாரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் யுனெஸ்கோவின் உலக நினைவக பதிவேட்டில் பொறிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஒன்றிய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்த அறிவிப்பு நாட்டிற்கு ஒரு குறிப்பிடத்தக்க தருணம் ஆகும். இது உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்க்கும் தருணம். யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் கீதை மற்றும் நாட்டிய சாஸ்திரம் சேர்க்கப்பட்டுள்ளது நமது காலத்தால் அழியாத ஞானம் மற்றும் வளமான கலாச்சாரத்திற்கான உலகளாவிய அங்கீகாரமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
The post யுனெஸ்கோ உலக நினைவக பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம் சேர்ப்பு இந்தியாவுக்கு கிடைத்த பெருமை: பிரதமர் மோடி மகிழ்ச்சி appeared first on Dinakaran.