டெல்லி: ஸ்டார்லிங் இணைய சேவை இந்தியாவில் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் சூழல் உருவாகியுள்ளது. இணைய சேவைக்காக அந்த நிறுவனத்திற்கு மத்திய தொடர்புத் துறை விருப்ப கடிதம் அளித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே ஸ்டார்லிங் இணைய சேவை இந்தியாவில் விரைவில் பயன்பாட்டிற்கு வார்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அந்நிறுவனத்தின் இணைய சேவையை இந்தியாவில் வழங்குவதற்கு ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளன.
உலகிலேயே அதிக டேட்டாவை வழங்கும் ஜியோ நிறுவனம், தற்போது ஸ்பேஸ் எக்ஸுடன் இணைந்து கிராமப்புறங்களிலும் சேவைகளை வழங்க திட்டமிட்டது. ஸ்டார்லிங்கின் உபகரணங்களை வழங்குவதுடன், அதனை பொருத்தும் பணிகளையும் ஜியோ நிறுவனமே வாடிக்கையாளர்களுக்கு செய்து தரும் என்றும் அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பை மேலும் மேம்படுத்த இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக இரு நிறுவனங்களும் கூட்டாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
The post விரைவில் ஸ்டார்லிங் இணைய சேவை பயன்பாட்டிற்கு வரும்: ஒன்றிய அரசு விருப்ப கடிதம் அளித்ததாக தகவல் appeared first on Dinakaran.