குருகிராம்: அரியானா மாநிலம் குருகிராமில் 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த விமான பணிப்பெண் அங்கு நீச்சல் குளத்தில் பயிற்சி பெற்றார். அப்போது அவர் மயக்கம் அடைந்ததால் குருகிராமில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 6ம் தேதி சிகிச்சைக்காக வென்டிலேட்டரில் அனுமதிக்கப்பட்டார். அவர் அரை மயக்க நிலையில் இருந்தார். அப்போது அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட அடுத்த நாள், சதர் காவல் நிலையத்தில் அவர் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், என்னை, மருத்துவமனையின் ஊழியர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார். அரை மயக்க நிலையில் இருந்ததால், என்னால் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை. அங்கு இரண்டு செவிலியர்கள் இருந்தபோதும், அவர்கள் இவ்விசயத்தில் தலையிடவில்லை ’ என்று கூறியுள்ளார். அந்த விமானப் பணிப்பெண்ணின் வாக்குமூலம் மாஜிஸ்திரேட் முன்பு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த விவகாரம் விசாரணையில் உள்ளதாகவும், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் அரியானா காவல்துறை கூறியது.
The post வென்டிலேட்டரில் அனுமதிக்கப்பட்ட விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்: மருத்துவமனை ஊழியர் மீது வழக்கு appeared first on Dinakaran.