ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகத்தில் நேற்று முன்தினம் இரவு பற்றிய காட்டுத்தீ 2-வது நாளாக தொடர்ந்து எரிந்து வருகிறது. காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட செண்பகத்தோப்பு வனப்பகுதியில் அடர்ந்த மரங்கள், ஆண்டு முழுவதும் தண்ணீர் வரும் நீரோடைகள் உள்ளதால் யானை, சிறுத்தை, மான், காட்டு மாடு, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது.