11947 (முதல் போர்): முதல் காஷ்மீர் போர் என்றும் அழைக்கப்படும் போர், அப்போதைய சமஸ்தானமான ஜம்மு-காஷ்மீர் மீது புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளான இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையே வெடித்தது. இது 1947 அக்டோபரில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பழங்குடி போராளிகள் காஷ்மீர் சமஸ்தானத்தை ஆக்கிரமித்தபோது தொடங்கியது. இதற்கு பதிலளிக்கும் விதமாக, காஷ்மீர் மகாராஜா ஹரி சிங் ஜம்மு-காஷ்மீரை இந்திய ஒன்றியத்துடன் இணைத்த பிறகு, இந்தியா தனது துருப்புக்களை இப்பகுதியைப் பாதுகாக்க அனுப்பியது. இது இரு நாடுகளுக்கும் இடையே முழு அளவிலான மோதலுக்கு வழிவகுத்தது. 1949 ஜனவரியில் ஐ.நா.வின் மத்தியஸ்தத்துடன் கூடிய போர்நிறுத்தம் அமல்படுத்தப்படும் வரை மோதல் தொடர்ந்தது, இதன் விளைவாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு அமைந்து காஷ்மீரைப் பிரித்தது.
21965 (இரண்டாவது போர்): 1965 ஆகஸ்ட் 5 அன்று காஷ்மீர் தொடர்பாக ஆயுத மோதல் வெடித்தது.
உள்ளூர் கிளர்ச்சியாளர்களாக மாறுவேடமிட்ட ஆயிரக்கணக்கான பாகிஸ்தான் வீரர்கள் ஜம்மு-காஷ்மீரில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு வழியாக இந்தியப் பகுதிக்குள் ஊடுருவியதால் போர் வெடித்தது. ‘ஆபரேஷன் ஜிப்ரால்டர்’ என்று அழைக்கப்படும் இந்த ரகசிய நடவடிக்கை, இப்பகுதியை அமைதியில்லாமல் இருக்கவும், காஷ்மீர் மக்களை அரசுக்கு எதிராக தூண்டவும் நோக்கமாகக் கொண்டது. இந்தியா ராணுவ எதிர் தாக்குதலை தொடங்கி பதிலளித்தது. இந்தப் போர் 1965 செப்டம்பர் 23 வரை தொடர்ந்தது, அப்போது சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இரு தரப்பினரும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர்.
31971 (வங்கதேச விடுதலைப் போர்): 1971ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போர் கிழக்கு பாகிஸ்தானின் (இப்போது வங்காளதேசம்) மீதான பாகிஸ்தான் ராணுவத்தின் அடக்குமுறை மற்றும் அதன் சுதந்திரக் கோரிக்கையால் தூண்டப்பட்டது. வங்காளதேச சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவாக இந்தியா போரில் குதித்தது. கடுமையான சண்டைக்குப் பிறகு, 1971 டிசம்பர் 16 அன்று பாகிஸ்தானின் படைகள் சரணடைந்தன. இந்தப் போர் வங்கதேசத்தை ஒரு சுதந்திர நாடாக உருவாக்க வழிவகுத்தது.
41999 (கார்கில் போர்): 1999 கார்கில் போர் என்பது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு உயரமான மோதலாகும், இது பாகிஸ்தான் துருப்புக்களும், பயங்கரவாதிகளும் ஜம்மு மற்றும் காஷ்மீரின் கார்கில் பகுதியில் சிகரங்களை ஆக்கிரமித்த பின்னர் 1999ஆம் ஆண்டு மே முதல் ஜூலை வரை நடந்தது. விமானப்படையின் ‘ஆபரேஷன் சபேத் சாகர்’ ஆதரவுடன் அந்தப் பகுதியை மீட்க இந்தியா ‘ஆபரேஷன் விஜய்’யைத் தொடங்கியது. 1999 ஜூலை 26 அன்று இந்தியா மீண்டும் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை அடைந்ததன் மூலம் போர் முடிவுக்கு வந்தது, அந்த நாள் இப்போது ‘கார்கில் விஜய் திவாஸ்’ என்று கொண்டாடப்படுகிறது.
52016 (உரி தாக்குதல்): 2016 செப்டம்பர் 18 அன்று ஜம்மு-காஷ்மீரின் உரியில் உள்ள இந்திய ராணுவத் தளத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு 19 வீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, செப்டம்பர் 28, 29 அன்று இந்தியா எல்லைக்ககட்டுப்பாட்டுக் கோடு முழுவதும் ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை நடத்தியது. இந்த தாக்குதலில் எல்லையில் ஊடுருவத் தயாராக இருந்த தீவிரவாதிகள் பலர் பலியானார்கள். 62019 (புல்வாமா தாக்குதல்): 2019 பிப்ரவரி 26 அன்று, புல்வாமாவில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத பயிற்சி முகாமின் மீது இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. போர் விமானங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள முகாமை இந்தியா குறிவைத்தது. 1971ஆம் ஆண்டு நடந்த போருக்குப் பிறகு முதல் வான்வழித் தாக்குதல் இதுவாகும்.
The post 1947 முதல் இப்போது வரை நடந்த இந்தியா-பாகிஸ்தான் மோதல்கள்; இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு காஷ்மீருக்காக இருநாட்டு ராணுவமும் மோதிக்கொண்ட பின்னணி விவரம்: appeared first on Dinakaran.