வாஷிங்டன்: வரும் மே மாதம் 5-ம் தேதி உடன் ஸ்கைப் தளத்துக்கு விடை கொடுப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கு மாற்றாக டீம்ஸை பயனர்கள் மத்தியில் பிரபலப்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கடந்த 2003-ல் ஸ்கைப் அறிமுகம் செய்யப்பட்டது. வீடியோ வழி உரையாடல், வீடியோ கான்ஃபரன்சிங் மற்றும் வாய்ஸ் கால்ஸ் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இன்ஸ்டன்ட் மெசேஜிங், ஃபைல் டிரான்ஸ்பர் உள்ளிட்ட அம்சங்கள் இதில் அடங்கும். டெஸ்க்டாப் உள்ளிட்ட கணினி மற்றும் மொபைல் போனில் இதை பயன்படுத்த முடியும். 2005-ல் 50 மில்லியன் பயனர்களை ஸ்கைப் தளம் எட்டியது.