புதுடெல்லி: தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே,\” நாட்டில் நடைபெறும் உள்நாட்டு கலவரங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே காரணம் என சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இதையடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்த பாஜக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இரு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஷால் திவாரி,\” இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கண்ணியம் காக்கப்பட வேண்டும். இப்படி தொடர்ச்சியாக அவதூறு தெரிவித்து கொண்டிருப்பதை ஏற்க முடியாது. மேலும் இது அவதூறு கருத்தை தாண்டி உச்ச நீதிமன்றத்தின் மீது வெறுப்பை உமிழ்வதாக தான் பார்க்க முடியும். எனவே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறியதில்,\” இதுபோன்று தொடர்ச்சியான அவதூறு விமர்சனங்கள் முன்வைப்பதை ஏற்கவோ அல்லது அனுமதிக்கவோ கண்டிப்பாக முடியாது. இருப்பினும் இதுபோன்ற செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விளக்கங்களுடன் கூடிய ஒரு உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தார்.
The post அவதூறு விமர்சனங்களை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திட்டவட்டம் appeared first on Dinakaran.