புதுடெல்லி: மக்களவையில் திமுக எம்பி கதிர் ஆனந்த் எழுப்பிய கேள்வியில், ‘‘தமிழ்நாட்டில் குறிப்பாக வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உணவுப் பதப்படுத்தும் தொழில்களை மேம்படுத்த ஒன்றிய அரசு ஏதேனும் சிறப்புத் திட்டங்களை முன்மொழிந்துள்ளதா? என்று கேட்டிருந்தார். இதையடுத்து அதற்கு ஒன்றிய அமைச்சர் ரவ்நீத் சிங் எழுத்து பூர்வமாக அளித்த பதிலில், ‘‘தமிழகத்தின் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி உட்பட நாட்டில் உணவு பதப்படுத்துதல் துறையின் வளர்ச்சியின் சாத்தியக் கூறுகளைக் கருத்தில் கொண்டு, உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம் மத்தியத் துறைத் திட்டங்களான பிரதான் மந்திரி கிசான் யோஜனா மூலம் உணவு பதப்படுத்தும் தொழில்களை அமைப்பதற்கு ஊக்கமளித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
மாநிலங்களைவையில் திமுக உறுப்பினர் ஆர்.கிரிராஜன் எழுப்பிய கேள்வியில், ‘‘மொழிபெயர்ப்பு துறையில் செயற்கை நுண்ணறிவு மூலம் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் நடவடிக்கைகள் மற்றும் தீர்ப்புகளை மொழிபெயர்த்து வெளியிட ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?. அப்படியென்றால் அதற்கு என்று எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று கேட்டிருந்தார்.
இதையடுத்து அதற்கு ஒன்றிய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், ‘‘ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நீதித்துறை ஆவணங்கள், தீர்ப்புகளை மொழிபெயர்க்கும் பணியை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உச்ச நீதிமன்றம் மேற்கொண்டு வருகிறது. சுமார் 17 உயர்நீதிமன்றங்களில் இந்த பணிகள் நடந்து வருகிறது. இந்த அனைத்து மொழிபெயர்ப்பு பணிகளையும் உச்ச நீதிமன்றமே மேற்கொண்டு வருவதால் அதற்கென்று தனியாக நிதி எதுவும் ஒன்றிய அரசால் ஒதுக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மக்களவையில் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் பேசியதில் ‘‘திருநெல்வேலியில் தற்போது 100 படுக்கைகள் கொண்ட ஈ.எஸ். ஐ மருத்துவமனைகள் உள்ளது. இந்த மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரங்கள் , சி டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் கிரிட்டிக்கல் கேர் யூனிட், புற்றுநோய் பிரிவு ஆகவே முக்கியமாக தேவைப்படுகிறது. மேலும் இந்த உபகரங்களுடன் கூடிய 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக இது தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
The post உணவு பதப்படுத்தும் தொழிலை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன ? ஒன்றிய அரசுக்கு திமுக எம்பி கேள்வி appeared first on Dinakaran.