கான்பூர்: உத்தரபிரதேசத்தில் இருக்கும் காதலனை பார்ப்பதற்காக 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து ஓடிவந்த பெண் தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளதை, அவரே தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண், தனது நான்கு குழந்தைகளுடன் இந்த ஆண்டு மே மாதம் நேபாளம் வழியாக சட்டவிரோதமாக உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவிற்குள் ஊடுருவினார். சமூக வலைதளத்தின் மூலம் ஏற்பட்ட கள்ளக் காதலால், தனது காதலன் சச்சின் மீனாவை நேரில் சந்திக்க வந்தார். ஒரு கட்டத்தில் அந்தப் பெண் சச்சின் மீனாவுடன் வசிக்க ஆரம்பித்துவிட்டார்.
சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததற்காக கூறி ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட சீமா ஹைதர், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இன்னும் அவர் போலீஸ் விசாரணை வளையத்தில் உள்ளார். மறுபுறம், அவர் குடியரசுத் தலைவரிடம் தனக்கு இந்திய குடியுரிமை கோரி மனுவும் தாக்கல் செய்துள்ளார். இதற்கிடையில், தான் மீண்டும் ஒரு தாயாகப் போகிறேன் என்று சமூக ஊடகங்கள் மூலம் புதிய அறிவிப்பை வெளிப்பட்டுள்ளார். அதில், தான் 7 மாத கர்ப்பிணியாக இருப்பதாவும் கூறியுள்ளார். அந்த வீடியோ பதிவில் சீமா ஹைதர் கூறுகையில், ‘இன்று வரை இந்த விஷயத்தை வெளியிடவில்லை; ஏனெனில் தீய கண்கள் கொண்ட பல எதிரிகள் எனக்கு உள்ளனர்.
இருந்தாலும் அவர்களைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எல்லாம் சரியாக நடக்கும் போது நாங்களே அதை அறிவிக்க விரும்பினோம். இப்போது சோட்டா சச்சின், சோட்டா முன்னா அல்லது முன்னி பிறக்கப் போகிறார்கள். கடந்த மூன்று மாதங்களாக எனது உடல்நிலை சற்று மோசமாக இருந்தது. ஆனால் இப்போது எல்லாம் சரியாகிவிட்டது’ என்று கூறியுள்ளார். சீமா ஹைதரின் இந்த பதிவை பலரும் பலவிதமாக விமர்சித்து வருகின்றனர். சிலர் அவருக்கு ஆதரவாகவும், சிலர் அவரை விமர்சித்தும் பதிவிட்டு வருகின்றனர்.
The post உத்தரபிரதேச காதலனை பார்ப்பதற்காக 4 குழந்தைகளுடன் பாகிஸ்தானில் இருந்து ஓடிவந்த பெண் கர்ப்பம்: சமூக வலைதளம் மூலம் ஏற்பட்ட காதலின் விபரீதம் appeared first on Dinakaran.