டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37வது கூட்டம் நாளை மறுநாள் (30.01.2025) நடைபெறவுள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா தலைமையில் காணொளி காட்சி மூலமாக நடக்கிறது. கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அரசு அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காவிரி நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண காவிரி மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஆணையத்தின் சார்பில் அடுத்தடுத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு தொடர்புடைய மாநிலங்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.இதுவரை 36 கூட்டங்கள் நடந்து முடித்திருக்கிறது.
இந்நிலையில் வரும் 30ம் தேதி 37 வது காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் அதன் தலைவர் தலைமையில் டெல்லியில் கூடுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேறக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரியைச் சேர்ந்த அரசு பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கோடை கால தண்ணீர் தேவையை முன்னிறுத்தி தமிழகத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்துவிட தமிழக அரசுப் பிரதிநிதிகள் வலியுறுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
The post காவிரி மேலாண்மை ஆணையத்தின் 37வது கூட்டம் நாளை மறுநாள் நடைபெறும் appeared first on Dinakaran.