புதுடெல்லி: மக்களவையில் நேற்று பூஜ்ய நேரத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் கோவால் கே.படாவி, “டீப் சீக் செயலியிடம் திபெத் பற்றி கேட்டபோது அது எப்போதும் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என பதிலளித்தது. ஆந்திரபிரதேசம், உத்தரபிரதேசம் இந்தியாவின் ஒருபகுதியாக இருப்பது பற்றிய கேள்விக்கும் டீப் சீக் செயலி உறுதியான, விரிவான பதிலை கொடுத்தது.
ஆனால் அருணாச்சலபிரதேசம் இந்தியாவின் ஒருபகுதியா என்று கேட்டபோது, டீப் சீக் செயலி எந்த பதிலையும் தர மறுத்து, அது தற்போது என் எல்லைக்கு அப்பாற்பட்டது. வேறு ஏதாவது பற்றி பேசலாம் என பதிலளித்தது. வௌிநாட்டு தொழில்நுட்பத்தில் இந்த வகையான பதில்களுக்கு இந்தியாவில் இடமில்லை. அருணாச்சலபிரதேசம் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தேசிய உணர்வுகளை புண்படுத்திய டீப் சீக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக சீனாவுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும்” என வலியுறுத்தினார்.
The post சீனாவின் டீப் சீக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும்: மக்களவையில் காங். வலியுறுத்தல் appeared first on Dinakaran.