புதுடெல்லி: டெல்லி சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கையில் ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் 15 உத்தரவாதங்களை அளித்துள்ளார். டெல்லி சட்டமன்ற தேர்தல் வருகிற 5ம் தேதி நடைபெற உள்ளது. இதனைமுன்னிட்டு ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று கெஜ்ரிவாலின் உத்தரவாதம் என்ற பெயரில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இதற்கான நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், “தேர்தல் அறிக்கையில் 15 உத்தரவாதங்கள் உள்ளன.
அதில் முதலாவதாக டெல்லி மக்களுக்கு வலுவான வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மகிளா சம்மன் யோஜனாவில் கீழ் பெண்களுக்கு மாதாந்திர நிதிஉதவி ரூ.2100 உறுதி செய்யப்படுகின்றது. மூத்த குடிமக்களுக்கு சஞ்சீவானி யோஜனா இலவச சுகாதார வசதிகள் வழங்கப்படும். நிலுவையில் உள்ள உயர்த்தப்பட்ட தண்ணீர் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும். டெல்லி குடியிருப்பாளர்களுக்கு மாதத்திற்கு ரூ.25ஆயிரம் மதிப்புள்ள சலுகைகளை வழங்கும் ஆம் ஆத்மியின் தற்போதைய இலவச திட்டங்கள் தொடரும் உள்ளிட்ட 15 உத்தரவாதங்களை ஆம் ஆத்மி உங்களுக்கு வழங்குகின்றது” என்றார்.
The post டெல்லி தேர்தல் அறிக்கையில் 15 உத்தரவாதங்கள்: கெஜ்ரிவால் அறிவிப்பு appeared first on Dinakaran.