திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் ஆண்டுதோறும் அடைபட்டு மீனவர்கள் கடலுக்குள் படகுகள் மூலம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பழவேற்காடு மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசின் உத்தரவுபடி ரூ.26.85 கோடி மதிப்பீட்டில் பழவேற்காடு ஏரி முகத்துவாரம் தூர் வாரி அலை தடுப்பு சுவர்கள் அமைத்து நிலைப்படுத்தப்படும் பணியை மேற்கொள்ள ஆணை வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி ரூ.26.85 கோடி மதிப்பீட்டில் அரசின் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, பழவேற்காடு முகத்துவாரத்தை நிரந்தரமாக நிலைப்படுத்தும் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை செயல்படுத்திட ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, 24.1.2024 அன்று முதல் பணிகள் தொடங்கப்பட்டு, வடக்கு அலை தடுப்பு சுவர் 325 மீட்டரும் மற்றும் தெற்கு அலை தடுப்பு சுவர் 292 மீட்டரும் அமைக்கப்பட்டு, 4 கி.மீ. சாலை அமைத்திடவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது, மணல் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதை உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் பழவேற்காடு முகத்துவாரத்தை நிரந்தரமாக நிலைப்படுத்தும் தடுப்பு சுவர் அமைக்கும் பணியை நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வரும் மழை காலத்திற்குள் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் அறிவுறுத்தினார். அப்போது மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை உதவி இயக்குநர் அஜய் ஆனந்த், தனித்துணை கலெக்டர் (சபாதி) பாலமுருகன், வட்டாட்சியர் சோமசுந்தரம் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.
The post பழவேற்காடு ஏரியின் முகத்துவாரம் பகுதியில் ஆழம், அகலப்படுத்தும் பணி: கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.