டெல்லி: விவசாய குளிர்பதன சேமிப்பு கிடங்குகளுக்கான மானியம் வழங்க திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் காய்கறிகளை சேமிக்க குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள் உருவாக்க விவசாயிகளுக்கு வழங்கப்படும் மூலதன முதலீட்டு மானியம் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி மக்களவையில் கேள்வி எழுப்பியதோடு ஒன்றிய அரசுக்கு கோரிக்கையும் வைத்துள்ளார். அதில் அவர், தமிழ்நாட்டில் தற்போதுள்ள குளிர் சேமிப்பு வசதிகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் சேமிப்பு திறன் விவரங்கள்,
குளிர் சேமிப்புக் கிடங்குகளின் கட்டுமானம், விரிவாக்கம், நவீனமயமாக்கல் மற்றும் தோட்டக்கலைப் பொருட்களுக்கான மூலதன முதலீட்டு மானியம் என்ற தலைப்பிலான திட்டத்தின்கீழ் நீட்டிக்கப்பட்ட கடன்-இணைக்கப்பட்ட மானியத்தின் விவரங்கள், தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை மற்றும் தொடர்புடைய குளிர்பதன சேமிப்பு வசதிகளின் விவரங்கள் ஆகியவற்றை வெளியிட கோரியுள்ளார்.
The post விவசாய குளிர்பதன சேமிப்பு கிடங்குகளுக்கான மானியம்: கனிமொழி எம்.பி. கோரிக்கை appeared first on Dinakaran.